வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலை அமைப்பு, பராமரிப்பு டிரஸ்ட் சார்பாக திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் அமைந்துள்ள வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் தனபாலன் வரவேற்றார். , பொருளாளர் பெருமாள்சாமி, டிரஸ்டின் உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி ,துணை மேயர் ராஜப்பா பங்கேற்றனர்.அ.திமு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், அமைப்புச் செயலர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், பரமசிவம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வீரமார்பன் பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவையின் சார்பாக தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சண்முகவேல் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது போல்அனைத்து கட்சியினரும் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.