| ADDED : டிச 05, 2025 05:32 AM
சின்னாளபட்டி: காந்திகிராமத்தில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில வாலிபால் போட்டியில் திருச்சி ஜமால்முகமது கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. காந்திகிராம பல்கலையில் டாக்டர் டி.எஸ் சவுந்தரம் நினைவு கோப்பைக்கான கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டிகள் நடந்தது. பல்கலை துணை வேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். 9 அணிகள் பங்கேற்றதில் திருச்சி, மதுரை, கோவை, காந்திகிராம அணிகள் கலந்து கொண்ட லீக் போட்டிகளை பதிவாளர் சுந்தரமாரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புஷ்பா துவக்கி வைத்தனர். திருச்சி ஜமால்முகமது கல்லுாரி அணி பரிசுக்கோப்பையுடன் 15 ஆயிரம் ரூபாய் பெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லுாரி 2ம் இடம், கோவை விவேகானந்தா பல்கலை 3ம் இடம், காந்திகிராம பல்கலை அணி 4ம் இடம் பிடித்தன. விளையாட்டு குழு தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடந்தது. ஏற்பாடுகளை பல்கலை உடற்பயிற்சி மற்றும் யோகா மைய பணியாளர்கள் செய்திருந்தனர்.