/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி
100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மானுார் பகுதியில் குளவிகள் தாக்கியதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பழநி மானுார் பகுதியில் தாழையூத்து செல்லும் சாலைப் பகுதியில் நேற்று 100 நாள் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அங்கிருந்த புதரை அகற்றும் போது வெளியேறிய குளவிகள் தொழிலாளர்களை தாக்கியது. இதில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.