மேலும் செய்திகள்
மின் மயானம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
05-Aug-2025
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் திடக்கழிவு மேலாண்மைக்கென தானமாக இடம் வழங்கப்பட்டபோதும் கீழக்கோட்டை மயான பகுதியில் குவிக்கப்படும் கழிவுகள் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. சின்னாளபட்டி பேரூராட்சியில் மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்காக ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் ஒரு மயானமும், கீழக்கோட்டை பகுதி மக்களுக்காக சின்னாளப்பட்டி பைபாஸ் ரோட்டில் ஒரு மயானம், செக்காபட்டி பகுதி ஆரியநல்லுார் ரோட்டில் ஒரு மயானமும், சத்யா நகர் அருகே 2 மயானங்களும் உள்ளன. பெரும்பாலான மயானங்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை விட பேரூராட்சியால் சேகரிக்கப்படும் கழிவுகளை குவிக்கும் குப்பை தொட்டிகளாக மாறி வருகின்றன. அஞ்சும் காலனி பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்காக வளம் மீட்பு பூங்கா உள்ளபோதும் இடப்பற்றாக்குறை பிரச்னையை காரணமாக கூறி வந்தனர். அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவுப்படி தனிநபர் மூலம் இதற்காக இடம் தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன் பேரூராட்சி வசம் ஒரு ஏக்கர் 42 சென்ட் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. கீழக்கோட்டை மயானத்தில் கழிவுகள் குவித்து எரிக்கப்படும் பிரச்னைக்கு பல ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படாத நிலை உள்ளது.அவ்வப்போது எரியூட்டப்படும் பாலிதீன் கழிவுகள் நச்சாக மாறி மக்களை அவதிப்படுத்துகிறது. பைபாஸ் ரோடு வழியே வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் கண் , சுவாச பிரச்னைகளால் பாதிக்கின்றனர். புகை மூட்டம், பலத்த காற்றால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் சூழ்ந்து சுவாச பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியோர் பாதிப்படைவதும் சிகிச்சைக்காக அலைக்கழிப்பிற்கு உள்ளதும் வாடிக்கையாகி விட்டது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என மக்கள் புலம்புகின்றனர்.அடுத்தடுத்து குவிக்கப்படும் பாலிதீன் கழிவுகள் நச்சாக மாறி இப்பகுதியில் தொற்று பரவல் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ---கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடுத்துறை திருநாவுக்கரசு,பா.ஜ., மாவட்ட நெசவாளர் அணி செயலாளர், சின்னாளபட்டி : குப்பை கழிவுகளை முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்புவதில்லை. கழிவுகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பிற்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். சாக்கடையில் கழிவுகள் குவிவது தாராளமாகி விட்டது. இவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியே குவித்து எரிக்கின்றனர். இது தவிர தினமும் பல டன்கள் அளவில் மேட்டுப்பட்டி, பைபாஸ் ரோடு, அம்பாத்துறை ரோடு உள்ளிட்ட மயான பகுதிகளில் குவிக்கின்றனர். வார்டுகளிலும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.மழைக்காலங்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கும் அவலம் பல ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது. பேரூராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இப்பிரச்னைகளில் அலட்சியம் காட்டுகின்றனர். நோயாளிகளாக்கும் புகை மண்டலம் நாகஜோதி,தனியார் நிறுவன ஊழியர், சின்னாளபட்டி : பேரூராட்சியின் கழிவுகளை வி.எம்.எஸ் காலனி, கீழக்கோட்டை மயானங்களில் குவித்து எரிக்கும் பிரச்னைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை. அவ்வப்போது எரியூட்டப்படும் பாலிதீன் கழிவுகள், நச்சாக மாறி மக்களை அவதிப்படுத்துகிறது. பைபாஸ் ரோடு வழியே வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் கண், சுவாச பிரச்னைகளால் பாதிக்கின்றனர். புகை மூட்டம் பலத்த காற்றால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் சூழ்ந்து மக்களை மூச்சு திணறல், சுவாச பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. குழந்தைகள், முதியோர் பாதிப்படைவதும், சிகிச்சைக்காக அலைக்கழிப்பிற்கு உள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் இப்பிரச்னையால் பாதிக்கின்றன. இவ் வழியே வாகனங்களில் செல்வோரும் பாதிக்கின்றனர்.
05-Aug-2025