திருகல் நோய்களை தடுக்க வழிமுறை
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி விவசாயிகள் வெங்காய பயிர்களை தொடர்ந்து கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். மழைக்காலங்களில் ஏற்படும் வெங்காய திருகல் நோயால் சாகுபடி குறைந்து, மகசூல் வெகுவாக பாதிக்கிறது. தொடர் மழை காலங்களில், மண்ணின் ஈரப்பதம்,காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் திருகல் நோயால் வெங்காயம் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இந்த நோய் குளோமெரல்லா பிங்குரேலட்டா என்ற ஒரு வகை பூஞ்சானம், வெங்காய பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயிர் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டு திருகல் பாதிப்பு தொடர்கிறது. கோடை உழவால் மண்ணில் உள்ள பூஞ்சானங்கள் அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அகற்றி விட வேண்டும் என குஜிலியம்பாறை தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லமுத்து தெரிவித்தார்.