உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் வராது தொற்று: தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்: கண்டுக்காது வேடிக்கை பார்க்கும் உள்ளாட்சிகள்

ஏன் வராது தொற்று: தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்: கண்டுக்காது வேடிக்கை பார்க்கும் உள்ளாட்சிகள்

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழையால் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கும் நிலையில் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கும் உள்ளாட்சிகளால் மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவநிலை பெய்து வருவதால் குளுமையான சூழல் உருவாகி வருகிறது. இதோடு ஆங்காங்கு தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட தொற்றுக்கு வாய்ப்பு உள்ளது. மழைநீர் தேங்காது காலி தொட்டி, குடங்கள், டயர் போன்றவற்றை அடிக்கடி துாய்மை செய்வதால் டெங்கு கொசுக்கள் வளர்வதை தவிர்க்கலாம். ஆனால் இதை எதையும் செய்யாது உள்ளாட்சிகள் அசட்டை போக்கை கடைப்பிடிக்கின்றன. மக்களும் மழை நீர் தேக்கத்தால் உருவாகும் கொசுக்களால் காய்ச்சல் என உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் .சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவர் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதோடு ஆங்காங்கு தேங்கும் மழை நீரை அகற்ற உள்ளாட்சிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் .சாக்கடைகளை முறையாக துார் வாரி மழை நீர் வழிந்தோட வழி காண வேண்டும்.ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி உள்ளிட்ட சில உள்ளாட்சி அமைப்புகள் மழைக்கு பின்னர் சாக்கடைகளை துார்வாருகின்றனர். இதை அவ்வப்போது செய்திருந்தால் கொசு உற்பத்தியை தடுத்திருக்கலாமே என மக்கள் கேள்வி கேட்கும் நிலையும் தொடர்கிறது .இனியாவது இதை முறையாக செய்வதோடு ஆங்காங்கு கொசு மருந்துகளை அடிப்பதோடு வீடுவீடாக சென்று மழைநீர் தேக்கத்துக்கு வழி காண வேண்டும் . ............ மிகுந்த மன உளைச்சல் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நடந்து செல்லும் நபர்களை கண்டு கொள்ளாமல் தேங்கிய தண்ணீரில் வேகமாக செல்கின்றனர். நடந்து செல்லும் நபர்கள் மீது தண்ணீர் தெளிக்க பள்ளி, கல்லுாரி , அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சாக்கடை கழிவு நீர் மழை நீருடன் கலந்து சாலைகளில் ஓடுவதால் நோய் தொற்று ஏற்படுகிறது. மோகன்ராஜ், தனியார் பள்ளி ஆசிரியர், சின்னகலையபுத்துார்,பழநி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை