வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா அவலங்களையும் தெரிவியுங்கள், வாக்காளர்களுக்கு தெரியட்டும், தெளியட்டும்
மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியம், 306 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து அமைப்புகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் கட்சி சார்ந்த நபர்களே இருந்தனர். தற்போது ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள் , நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. பல இடங்களில் கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி ஊராட்சி நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்காததால் அலுவலர்களும் வருகையை தவிர்க்கின்றனர். ஒன்றியம் ,ஊராட்சிகளில் பதவிக்காலம் முடிந்து 7 மாதங்களாகியும் அப்பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகளின் ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் தொடர்கிறது. அலுவலக அறைகளில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்திற்கும் குறைவில்லை.கணினி, புதுவாழ்வு, வேலை உறுதி திட்ட பணிகளில் பெரும்பாலும் மகளிர் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் எந்த நேரமும் ஆக்கிரமித்து உள்ளனர். முன்னாள் பிரதிநிதிகள், ஆளுங்கட்சியினரின் நிர்வாக தலையீடு மக்களிடையே அதிருப்தியையும், தரமற்ற ஒப்பந்த பணிகள் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற பணிகள் சார்ந்த பிரச்னைகள் வளர்ச்சித்துறையினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.இப்பிரச்னைகளுக்கு கடிவாளம் அமைக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.
எல்லா அவலங்களையும் தெரிவியுங்கள், வாக்காளர்களுக்கு தெரியட்டும், தெளியட்டும்