உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது

கன்னிவாடி: கன்னிவாடி வனத்துறை ரேஞ்சர் குமரேசன் தலைமையிலான குழுவினர் குட்டத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வெயிலடிச்சான்பட்டி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் சிலர் வேட்டை நாய்களுடன் முகாமிட்டு இருந்தனர். அங்கிருந்த 14 பேரை வனத் துறையினர் சுற்றி வளைத்தனர். வெயிலடிச்சான்பட்டி அபிமன்யு, கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த மலையாண்டி, தங்கவேல், கருப்பையா, கோவிந்தராஜ், முருகன், நேரு, குமரவேல், அக்காடின்மேட்டை சேர்ந்த மாணிக்கம், சக்திவேல், குளித்தலையை சேர்ந்த பழனிச்சாமி, ஆறுமுகம், மணி உட்பட 14 பேர் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் 14 வேட்டை நாய்களுடன் 4 காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த வனத்துறையினர் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்தனர். சிப்பிப்பாறை வகையை சேர்ந்த 14 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு திண்டுக்கல் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 15:08

அடடே..... இவர்களை சந்தன கடத்தல் குற்றவாளிகள் போல் கைது செய்து photo எடுத்து பெருமை கொள்ளுவது மிக பெரிய செயலா? சரி அதே போல் தமிழகம் முழுவதும் கஞ்ச, போதை மருந்து, கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்பவர்களை இப்படி கைது செய்து ஏன்? photo போஸ் கொடுக்க வில்லை. காட்டு பண்ணி யை பிடித்து குற்றம்???? அடடே இது எனக்கு புதிய தகவல் தான். ஆனால் வெளி நாடுகளின் வேட்டையாட சில மாதம் அரசு அனுமதி கொடுக்கும் அதுவும் ஒரு சில காட்டில் வாழும் விலங்கை மட்டும் தான் வேட்டை ஆட அனுமதி உண்டு. அதில் பண்ணிக் Ku தடை இருக்காது


பிரேம்ஜி
செப் 23, 2025 07:16

நாய்களும் கைது? எந்த சிறையில் அடைத்தனர்? ஜாமீனில் வெளியே வர முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை