உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்

கொடை பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா வளாக சுவர் சேதமடைந்து காட்டுமாடுகள் புகுவதால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பிரையன்ட் பூங்காவிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பத்து ஏக்கரில் உள்ள இப்பூங்காவில் மலர் படுகைகள் அமைத்து பூக்கள் பூத்து குலுங்கின்றன. ஆண்டுதோறும் மலர் கண்காட்சியும் நடப்பதால் அதிக வருவாய் ஈட்டும் பூங்காவாக உள்ளது. பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தி பூங்காவை ரசித்து இளைப் பாறுகின்றனர். இந்நிலையில் பூங்காவை சுற்றியுள்ள வளாக சுவர் ஆங்காங்கே சேதமடைந்து சீரமைக்கப்படாமல் நிழல் வலை அமைப்பு மூலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் வழியாக எளிதில் காட்டுமாடுகள் புகுந்து பயணிகளை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் மலர்படுகைகள் சேதமடைந்து பூங்கா மலர் கட்டமைப்பும் சிதிலமடைந்து வருகிறது. ஏராளமான பயணிகள் வரும் பூங்காவில் காட்டுமாடு, காட்டுபன்றிகள் அச்சுறுத்தல் தொடர்கிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி பூங்கா வளாக சுவரை கட்டமைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ