உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் வீடு, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மலைப்பகுதியில் வீடு, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள நேர்மலையில் மலை வாழை மற்றும் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. கன்னிவாடி வனச்சரகம் ஆடலுார், பன்றிமலை, நேர்மலைப் பகுதிகளில் சில ஆண்டாக காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இவை விவசாய நிலங்களில் மலைவாழை, காபி, ஆரஞ்சு, பந்தல் பயிர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும். சில தினங்களாக நேர்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அங்கு மலைவாழைகளை சேதப்படுத்தி, தோட்ட பகுதியில் உள்ள வீடு, பாசனம் செய்யும் தளவாடப் பொருள் மற்றும் விவசாய பொருட்களையும் சூறையாடியது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் தவிக்கின்றனர். அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் வனத்துறையை அளிக்கும் பணம் தங்களுக்கு போதுமானதாக இல்லை . மலைப்பகுதியில் உள்ள யானைகளை தரைப்பகுதிக்கு இடம் பெயர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி