உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  உதவித்தொகை பெற்று தருவதாக கூறி 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

 உதவித்தொகை பெற்று தருவதாக கூறி 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டியில் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிய பெண்ணை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 85. உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். டிச.19 அன்று மனைவி வீரநாகம்மாள் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா 35, தான் ஒரு அரசு அலுவலர் எனவும் அரசின் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி அவரது ஆதார் கார்டை கேட்டுள்ளார். முருகேசன் நடக்க முடியாமல் இருந்ததால் பீரோவில் ஆதார் கார்டு இருப்பதாக தெரிவித்தார். பீரோவில் இருந்த ஆதார் கார்டை எடுத்துக் கொண்ட பிரியா, அங்கு வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய மனைவி வீரநாகம்மாள் பீரோவில் இருந்த ஆறு பவுன் நகை திருடு போனது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுப்படி பல்லடத்தில் இருந்த பிரியாவை கைது செய்தனர். இவர் பல இடங்களில் முதியோர்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை