உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காய்ச்சலால் பெண் பலி

காய்ச்சலால் பெண் பலி

வேடசந்துார்: வேடசந்துார் அருகே தமுத்துப்பட்டியில் காய்ச்சலால் தமுத்துப்பட்டியை சேர்ந்த பிரபு மனைவி கலையரசி 21, இறந்தார். தமுத்துப்பட்டியை சேர்ந்த இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கலையரசிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் வழியிலே இறந்தார். வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி கூறியதாவது: பொண்ணுக்கு காய்ச்சல் பாதித்துள்ளதாக கூறி வேடசந்துார், மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் வழியில் இறந்துள்ளார். இறப்பு குறித்து விசாரிக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை