உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்: இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்: இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் செம்பட்டி சேடப்பட்டியில் வீடு ஒன்றில் கடந்த 2001ம் ஆண்டு நகை திருடு போனது. இது தொடர்பாக அவர்கள் செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ரெங்கசாமி, போலீசார் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர், திருடு நடந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை 2001ம் ஆண்டு பிப்.,20ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர் . அப்போது, 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மானபங்கம் செய்தனர். விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் எனக்கூறி அன்று மாலையே அனுப்பி வைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hoj9dlw1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் மனமுடைந்த அந்தப் பெண், தன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் காப்பாற்றினார். இது தொடர்பாக அந்த பெண், கணவருடன் இணைந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தார். அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலில் விசாரணை நடந்தது. பிறகு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா அளித்த தீர்ப்பில்,'' ரெங்கசாமி, வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து'' உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பேசும் தமிழன்
பிப் 26, 2025 13:29

எந்தவொரு வழக்குக்கும் ஒரு காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்..... தாமதமாக வழங்கப்படும் நீதி..... மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.... இந்திய நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை சீரமைக்கப்பட வேண்டும்.


naranam
பிப் 26, 2025 04:02

குற்றம் நடந்து ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு நாற்பது வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் இத்தனை வருடங்கள் தாமதபடுத்தியவர்களுக்கும் சிறைத் தண்டனை தர வேண்டும்.


Ramesh Sargam
பிப் 25, 2025 20:47

இப்பொழுது தண்டனை பெற்றவர்கள் மேல் நீதிமன்றத்தை அதாவது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார்கள். அங்கே வழக்கு பலகாலம் நொண்டும் . முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை, அல்லது வயது முதிர்வு என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கும். நாம் பார்க்காத நீதியா?


mdg mdg
பிப் 25, 2025 20:43

நிதியை நீட்டினால் நீதி கிடைக்கும்


Ramesh Sargam
பிப் 25, 2025 20:23

இப்பொழுது மேல்முறையீடு செல்வார்களா தண்டனை விதிக்கப்பட்டவர்கள்?


Perumal Pillai
பிப் 25, 2025 20:19

கேவலமான நீதிமன்ற நடைமுறைகள் . ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய கேஸுக்கு இத்தனை வருடங்கள். பாவம் மக்கள் . சுப்ரீம் கோர்ட் நிச்சயம் இந்த கொடூர பயல்களை காப்பாற்றும் .


Sudha
பிப் 25, 2025 19:30

24 வருடம் முன்பு இதற்கு மானபங்கம் என்று பெயரா? வரலாற்று உண்மையை தெரிந்து கொண்டோம். ஆமாம் இத்தனை வருடங்கள் நீதி மன்றத்தில் எத்தனை பேர் மானத்தை பங்கம் seidhaargal?


Ray
பிப் 25, 2025 19:11

இந்த படத்தில் வலப்புறம் சைவ சித்தாந்த சாமியார்களும் இடதுபுறத்தில் வைணவ சாமியார்களும் உள்ளனர் இனி அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற அடிதடி அமர்க்களப்படும். போகட்டும் ஒரு சங்கடமான கேள்வி இதில் RSS எந்தப்பக்கம்?


சத்தியா
பிப் 25, 2025 18:57

தாமதமாக வந்த நீதியும் அநீதீயே


Ray
பிப் 25, 2025 18:43

ஜெயாவுக்கு ஏழரை சனி பிடித்திருந்த காலத்தில் நடந்த சம்பவம்


முக்கிய வீடியோ