உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடும்ப பிரச்னையில் பெண் கொலை

குடும்ப பிரச்னையில் பெண் கொலை

செம்பட்டி: கணவரைப் பிரிந்து வாழும் தங்கையின் வாழ்க்கைக்கு நீதி கேட்டு நண்பருடன் இணைந்து சகோதரரால் தாக்கிய தங்கையின் மாமியார் இறந்தார். செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேல் 60-. நீலாவதி 55, தம்பதியின் மகன் சண்முகவேல் 35.இவருக்கும் செம்பட்டி அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாக்கியராஜ் மகள் நந்தினி 30 க்கும், 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 9, 7 வயதில் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி 5 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுடன் பாளையங்கோட்டையில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். நந்தினியின் சகோதரர் தங்கசடையான் 36, இவரது நண்பர் மதுரை மணிகண்டன் 30, ஆகியோர் போடிக்காமன்வாடியில் உள்ள மைத்துனர் சண்முகவேல் வீட்டிற்கு சென்றனர். அங்கு சண்முகவேல் இல்லாததால் அவரது தாயார் நீலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த இருவரும் இரும்பு கம்பியால் நீலாவதியை தாக்கினர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். செம்பட்டி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !