மேலும் செய்திகள்
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்
30-Mar-2025
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி பாப்பாத்தி 55. நவாமரத்துப்பட்டி சென்ற அவர் கேத்தம்பட்டி நோக்கி நடந்து சென்றார். அப்போது டூவீலரில் எதிரே வந்த இரு இளைஞர்கள் வேடசந்துார் செல்வதற்கு வழி கேட்டு உள்ளனர். பாப்பாத்தி வழி சொல்லி கொண்டிருந்த போதே டூ வீலரின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர். பாப்பாத்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Mar-2025