உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்

ஆக்கிரமிப்பு அகற்றும் போது தீ குளிக்க முயன்ற பெண்

நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டி- முல்லைநகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் குமரவேல், வருவாய் துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது முருகேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணை ஸ்டவ்வை எடுத்து வந்து தீ குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.இதை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ