மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ.,க்கு மிரட்டல் நடவடிக்கைக்கு புகார்
24-Dec-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வேள்வி தின விழா கொண்டாடப்பட்டது.மெய்ப்பொருள் விளக்கத்துடன் விழா தொடங்கியது. மன்றச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கவுரவ தலைவர் பூரணச்சந்திரன் வேள்வியை நடத்தினார். மன்ற தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெகநாதன் , கல்லூரி முதல்வர் வாசுகி, பேராசிரியர்கள் பெரியசாமி, சிவபாக்கியம் பேசினர். பொருளாளர் அமுதவல்லி நன்றி கூறினார். துணைத் தலைவர் தனுஷ்கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
24-Dec-2025