உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அழிவை தடுக்க மரங்களுக்கு மஞ்சள் பூசி வழிபாடு

அழிவை தடுக்க மரங்களுக்கு மஞ்சள் பூசி வழிபாடு

திண்டுக்கல் : மரங்கள் அழிவை தடுக்கும் விதம் திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அவற்றுக்கு மஞ்சள் பூசி பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல்லிலிருந்து பழநி, கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பைபாஸ் ரோடுகளில் விரிவாக்க பணிகளுக்காக இரு புறமும் இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். அதற்கு பதில் புதிய மரங்களை நடவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.மரங்களை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. மரங்கள் போதியளவு இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2023ல் பெய்த மழை அளவை விட இந்தாண்டு குறைந்துள்ளது. மக்களும் மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் தவிக்கின்றனர். மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதை தடுக்கும் விதம் திண்டுக்கல்லைச் சேர்ந்த பல தன்னார்வ அமைப்புகள் ரோட்டோரங்கள், பொது இடங்கள், கண்மாய்கள், குடியிருப்புகளின் அருகே என பல இடங்களில் தங்களால் முடிந்த அளவிற்கு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கின்றனர். அதையும் சிலர் சேதப்படுத்துவது, கால்நடைகளை மேய வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் வீடுகள் மறைப்பதாக கூறி வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றியும் வருகின்றனர்.இவற்றை தடுத்து மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள மக்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளின் அருகிலிருக்கும் மரங்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து பூஜைகள் செய்ய தொடங்கி உள்ளனர். இதுபோன்ற மரங்களை பார்க்கும் போது கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சேதப்படுத்தாமல் அவர்களும் தம்மால் முடிந்த அளவிற்கு மரங்களை நடும் நிலை உருவாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை