புத்தகம் படித்தால் வேறு மனிதனாக மாற்றும் எழுத்தாளர் நாறும்பூநாதன் பேச்சு
திண்டுக்கல்: ''புத்தகம் படிப்பவர்களை வேறு ஒரு மனிதனாக மாற்றிவிடும் '' என, எழுத்தாளர் நாறும்பூநாதன் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,இலக்கிய களம் சார்பில் டட்லி பள்ளியில் நடந்த 11 வது புத்தக திருவிழாவில் அவர் பேசியதாவது: புத்தக திருவிழாவை நடத்துவது எளிதல்ல. மாணவர்களுக்கான புத்தகங்களும் அதிகமாக இங்கே இருக்கும். மாணவர்கள் புத்தகங்களை தொட்டு பார்க்க வேண்டும். சாகித்திய அகாடமி விருதுபெற்ற 18 பேர் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் என்பதை யாரும் சொல்வதில்லை. நடந்தே தமிழகம் முழுவதும் சென்றவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணியசிவா. கூகுள் ஒரு தனியார் நிறுவனம் அது தவறு செய்யலாம். திண்டுக்கல்லில் ஏராளமான படைப்பாளிகள் உள்ளார்கள். பயணங்களில் செல்லும் போது பெரும்பாலும் நாம் புத்தகங்களை வாசிக்கிறோம். புத்தகம் படிப்பவர்களை வேறு ஒரு மனிதனாக மாற்றிவிடும் என்றார்.