வூஷூ வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா
திண்டுக்கல்: தேசிய போட்டிக்கு புறப்படும் வூஷூ வீரர்களுக்கு வழி அனுப்பும் விழா திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள 9-வது பெடரேஷன் கப் வூஷூ சாம்பியன்ஷிப் - 2025 போட்டியில் கலந்து கொள்ள திண்டுக்கல் மாவட்ட வூஷூ சங்கத்தின் சார்பில் பயிற்சியாளர் ஜாக்கிசங்கர் தலைமையில் மாணவர்கள் ரேஷ்மி, ராகவி, ஸ்ரீ லதா, கலாந்திகா, மபாஸ் இப்ராஹிம், ஹரீஷ், தீரா, ஸ்ரீ முகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அணிக்காக பங்கேற்க உள்ளனர். டிச. 23 முதல் 30 வரை சத்தீஸ்கரில் நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சென்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வூஷூ வீரர், வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வழி அனுப்பும் விழா நடைபெற்றது. மாவட்ட வூஷூ சங்கத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் கவிதா, சங்க உறுப்பினர்கள் குரு, துரை முருகன் பூங்கொத்து வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.