உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மதுவால் கோபித்து வந்த மனைவி: வாலிபர் தற்கொலை

மதுவால் கோபித்து வந்த மனைவி: வாலிபர் தற்கொலை

எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மது பிரச்னையால் ஏற்பட்ட கோபத்தில் தாய் வீடு சென்ற மனைவியை அழைத்தும் உடன் வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் 38. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை இலுப்பபட்டி மேனகாவுக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளன. மோகன் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததால் மனைவி மேனகா கோபத்தில் தனது தாய் ஊரான இலுப்பபட்டி வந்துவிட்டார். இந்நிலையில் மோகன் தனது மனைவியை சந்தித்து ஊருக்கு செல்லலாம் என அழைத்தும் வரவில்லை. விரக்தியான மோகன் எரியோடு கோவிலுார் நரிமேடு காட்டுப் பகுதியில் மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை