உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

வேடசந்துார்: வேடசந்துார் பூத்தாம்பட்டி ஏ.டி. காலனி காளியம்மன் கோயில் திருவிழாவில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது உற்சாகமடைந்த பக்கத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மேடையின் முன்பாக நின்று ஆட்டம் ஆடி கூச்சலிட்டுள்ளனர். இதை உள்ளூர் பிரமுகர்கள் தட்டி கேட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த வெளியூர் இளைஞர்கள் ஊரில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, அதில் இருந்த உருட்டு கட்டைகளை எடுத்து வந்து கிராமத்தினரை கண்முடித்தனமாக தாக்கினர்.பாண்டியன் 45, கருப்பணன் 42, வேல்முருகன் 45, உள்ளிட்ட ஐந்து பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 நபர்களை வேடசந்துார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ