இளைஞர் கொலை; நால்வர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்த நாகராஜ் 30. இவர் நேற்று முன்தினம் இரவு ம.மூ., கோவிலுார் கோடாங்கிநாயக்கன்பட்டி பிரிவில் கொலை செய்யப்பட்டார். தாலுகா போலீசாரின் விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதில் தொடர்புடைய குழந்தைப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் 22, மாதவன் 23, விக்னேஷ்வரன் 22, கிரி 19 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qvjlax55&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0