திராவிட கட்சிகளுக்கு பேராபத்தான அரசியல் முன்னெடுப்பு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு
திராவிட கட்சிகளுக்கு பேராபத்தான அரசியல் முன்னெடுப்பு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சுஈரோடு, :''தமிழகத்தில் சீமான் ஆபத்தான அரசியலை முன்னெடுப்பதாக திருமாவளவன் கூறுகிறார். ஆமாம், திராவிட கட்சிகளுக்கு பேராபத்தான அரசியலை முன்னெடுக்கிறேன். என் அரசியல் திராவிட திருடர்களுக்கு ஆபத்தானது,'' என்று சீமான் பேசினார்.ஈரோட்டில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், கட்சி வேட்பாளரை ஆதரித்து, பவானிசாலை நெரிக்கல்மேட்டில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதாவது: கைரேகை வைக்க கூடிய குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு ஈ.வெ.ரா., பேசியது ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஆனால், இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர். அவரை ஜாதிய குறியீடாக மாற்றியது யார்? வைக்கம் போராட்டத்துக்கு காங்., கட்சியில் இருந்ததால் ஈ.வெ.ரா., அழைக்கப்பட்டார். கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட, 42 பேர் எரித்து கொல்லப்பட்டபோது கம்யூனிஸ்டுகள் கலவரத்தை துாண்டுவதாக பிரச்னையை திசை திருப்பியவர் ஈ.வெ.ரா.,நாடு விடுதலை பெற்ற போது தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பேசியவர் காயிதே மில்லத். இவரே பெரியார். இவரை விட யார் பெரியார். திராவிட கட்சியின், 60 ஆண்டு குப்பையை எரிக்க வந்திருக்கிறேன். திராவிட திருட்டு இருட்டில் இருந்து விடுபட ஒரு வெளிச்சத்தை கொடுங்கள். தொல்காப்பியரை, வள்ளுவனை ஆரியர் அடிமை. கம்பன், அருண் மொழி சோழனை ஆரிய கூலிகள் என்று, ஈ.வெ.ரா., விமர்சித்தார். ஆனால், ஆங்கிலேய அடிமையாக இருந்தது ஈ.வெ.ரா.,தான். நீ துணிவிருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் நில். ஈ.வெ.ரா., பெருமையை பற்றி பேசாமல் ஓட்டு வாங்க முடியாதென்றால் எனக்கு ஓட்டு போட வேண்டாம். தமிழகத்தில் சீமான் ஆபத்தான அரசியலை முன்னெடுப்பதாக திருமாவளவன் கூறுகிறார். ஆமாம், திராவிட கட்சிகளுக்கு பேராபத்தான அரசியலை முன்னெடுக்கிறேன். என் அரசியல் திராவிட திருடர்களுக்கு ஆபத்தானது. இவ்வாறு சீமான் பேசினார்.