பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க பயிற்சி முகாம்
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க பயிற்சி முகாம் ஈரோடு :ஈரோடு, எல்லீஸ்பேட்டையில், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியின் அப்துல்கலாம் அரங்கத்தில், இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு, மண்டல அளவில் மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. பொருளாளர் முருகன், இணை செயலர்கள் பரிமளாராஜா, வசந்தி சத்யன், நிர்வாக அலுவலர் அருள்குமரன், துணை முதல்வர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் வானதி வரவேற்றார். தாளாளர் பெரியசாமி தலைமையுரை வாசித்தார். பாரதியார் பல்கலையின் இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரேமசுதா, பாரதியார் பல்கலை துணைவேந்தரும், தேர்வுக்குழு உறுப்பினருமான வாசுகி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மைய முதல்வர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் லதா, இந்திய செஞ்சிலுவை சங்க, தமிழ்நாடு கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் தாமஸ் ஜான், ஈரோடு அந்தியூர் அரசு மருத்துவமனையின் மனநல ஆலோசகர் கவிதா சுப்பிரமணியன், ஈரோடு மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீ ஆகியோர் பேசினர். பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் நரேன்ராஜா, இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் மேகலா நன்றி கூறினார்.