உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராகுல் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி காங்., ஆர்ப்பாட்டம்ஈரோடு, :ராகுல் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி, ஈரோடு, சூரம்பட்டிவலசில் மாவட்ட காங்., சார்பில், அசாம் போலீசார் மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி., சுதா, எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ்குமார், ரூபி மனோகரன், கணேஷ், தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:அசாம் மாநிலம் கவுகாத்தி போலீசார், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., துாண்டுதலின் பேரில், காங்., எம்.பி., ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை உடன் திரும்ப பெற வேண்டும். கோமியம் குடிப்பவர்களுக்கே இத்தனை தைரியம் இருந்தால், தேசத்தை உருவாக்கிய காங்கிரஸாருக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என சிந்திக்க வேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக, பா.ஜ.,-ஆர்.எஸ்.எஸ்., போராடியதில்லை. காங்., கட்சியை முடக்க முயல்வதை, பா.ஜ., அரசு கைவிட வேண்டும். இவ்வாறு பேசினார்.* பின்னர், ஈரோட்டில் நிருபர்களிடம், செல்வபெருந்தகை கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எந்த கட்சிகளும் போட்டியிடாத சூழலில், தி.மு.க., வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார். ஈரோடு கிழக்கை தி.மு.க.,வுக்கு விட்டு கொடுத்தது, நான் தனியாக எடுத்த முடிவல்ல. காங்., தலைமையில், முதல்வர் ஸ்டாலின் கேட்டு கொண்டதால் தி.மு.க., நிற்கிறது. ஈரோடு கிழக்கை விட்டு கொடுத்து, அதைவிட அதிகமாக தி.மு.க.,விடம் பெறுவோம். தமிழகத்தில், காமராஜர் ஆட்சி ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். தி.மு.க., அரசை முன்னாள் தலைவர் இளங்கோவன், 'காமராஜர் ஆட்சி நடக்கிறது' என கூறினார். நல்ல ஆட்சி என ஒன்று நடந்தால், அது காமராஜர் ஆட்சியாகத்தான் இருக்கும் என்ற நோக்கில் அப்படி சொல்லி இருப்பார். பரந்துார் விமான நிலையம் அமையும் இடம், எனது தொகுதிக்குள் வருகிறது. தற்போது, அங்கு நிலம் வைத்துள்ள மக்களையும் இணைத்து, 'பார்ட்னர்ஷிப் ஏர்போர்ட்' அமைக்க வேண்டும் என, வலியுறுத்துகிறோம். அந்நிலம் அவர்களுடையதாகவே இருக்கும். அவர்களுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும். ஈ.வெ.ரா., இன்றி அரசியலை பேச முடியாது. அவரை தேவையில்லாத வார்த்தைகளால் சீமான் தொட்டுவிட்டார். தக்க பதிலடியை மக்கள் கொடுப்பர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை