உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூங்கில் நுாலில் பாத்-டவல் தயாரிப்பு அடுத்த கட்டத்தில் கைத்தறி நெசவாளர்

மூங்கில் நுாலில் பாத்-டவல் தயாரிப்பு அடுத்த கட்டத்தில் கைத்தறி நெசவாளர்

மூங்கில் நுாலில் 'பாத்-டவல்' தயாரிப்பு அடுத்த கட்டத்தில் கைத்தறி நெசவாளர்சென்னிமலை, : ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 40 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. நுாற்றாண்டு காலமாக பருத்தி நுாலில் போர்வை, படுக்கை விரிப்பு, துண்டு, வீட்டு உபயோக துணிகளை நெசவு செய்து இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் செயற்கை நுால் தயாரிப்பிலும், அதை துணி தயாரிப்புக்கு பயன்படுத்துவதிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இத்திட்டங்களுக்கு கை கொடுக்கும் விதமாக தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதில் ஒரு முன் முயற்சியாக, கோ-ஆப்டெக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன், சென்னிமலை காளிகோப்டெக்ஸ் கூட்டுறவு சங்கம், மூங்கில் நுாலில் துணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக முழுக்க முழுக்க மூங்கில் நுால் கொண்டு, 30க்கு 60 செமீ., அளவில் 'பாத்-டவல்' எனப்படும் துண்டு ரகத்தை கைத்தறி நெசவில் தயாரித்துள்ளனர். இது பருத்தி நுால் துண்டை விட மிக மிருதுவாகவும், தண்ணீர் உறிஞ்சும் தன்மை அதிகமாகவும், எளிதில் உலர்த்தி விடவும் முடிகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், இந்த மூங்கில் நுால் தயாரிப்பில் உருவான 'பாத்-டவல்' விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு டவல், 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, 'பருத்தி நுாலை விட மிக எளிதாக நெசவு செய்ய முடிகிறது. பெண்கள், வயதான ஆண்கள் மிக சுலபமாக நெசவு செய்யலாம். கூலியும் அதிகமாக பெறலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ