மேலும் செய்திகள்
யானை தாக்கி தொழிலாளி பலி
17-Jan-2025
மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாம்வனத்துறைக்கு மக்கள் கடும் எச்சரிக்கைசத்தியமங்கலம், :சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, கடம்பூரை அடுத்துள்ள உகினியம் மலை கிராமத்தில் கடந்த மாதம், 16ம் தேதி இரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயி ராஜப்பனை ஒற்றை யானை தாக்கி கொன்றது.இந்த யானை வனத்துக்குள் செல்லாமல், அவ்வப்போது உகினியம் மலை கிராமத்துக்குள் நடமாடி வருகிறது. இரவானால் வரும் ஒற்றை யானை, பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் சத்தி வனச்சரக பணியாளர்கள் உகினியம் பகுதியில் வரும்போது, ஆசனுார் வனச்சரக எல்லையில் யானை நடமாடியது. அந்த பகுதி தங்கள் எல்லை இல்லை என்பதால், யானையை விரட்டாமல் சென்று விட்டனர். மாலையில் ஊருக்குள் வரும் யானை, காலை, ௯:௦௦ மணி வரை மக்காச்சோள காட்டில் பதுங்கியபடி உள்ளது. அப்போது பைக்கில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் தனியாக நடமாடவே அச்சமாக உள்ளதாக, உகினியம் மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் எல்லையை காட்டி ஒதுங்கி சென்றால், கிராம மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
17-Jan-2025