உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு முகாசிபிடாரியூர் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு முகாசிபிடாரியூர் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு முகாசிபிடாரியூர் மக்கள் ஆர்ப்பாட்டம்சென்னிமலை: சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட முகாசிப்பிடாரியூர் ஊராட்சியை, மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முகாசிப்பிடாரியூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், சென்னிமலை யூனியன் அலுவலம் முன், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோஷமிட்டு வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். காங்கேயம் முன்னாள் எம்.எல்,ஏ., நடராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., மட்டுமின்றி த.வெ.க., - தே.மு.தி.க., - கம்யூ., கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.பொருளாதார குற்றப்பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை