உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூன்று நாள் தேரோட்டம் நிறைவுசிவன்மலை கோவில் தேர் நிலை சேர்ந்தது

மூன்று நாள் தேரோட்டம் நிறைவுசிவன்மலை கோவில் தேர் நிலை சேர்ந்தது

மூன்று நாள் தேரோட்டம் நிறைவுசிவன்மலை கோவில் தேர் நிலை சேர்ந்ததுகாங்கேயம், :மூன்றாம் நாளான நேற்று சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர் நிலை சேர்ந்தது.காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா கடந்த மாதம், 2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 11ம் தேதி மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் இழுக்கப்பட்டு கிரிவலப்பாதை வடக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:10 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் போட்டபடி தேரை இழுத்து சென்றனர். மாலை, 6:40 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. தொடர்ந்து, 20ம் தேதி வரை காலை 9:00 மணிக்கு காலசந்தி திருக்கோவில் மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப கட்டளை நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து சாமி திருமலைக்கு எழுந்தருள்கிறார். இதை தொடர்ந்து தேர் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !