உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாமினில் வந்த குற்றவாளிகள் தலைமறைவுகையெழுத்து போட்ட உறவினருக்கு சிக்கல்

ஜாமினில் வந்த குற்றவாளிகள் தலைமறைவுகையெழுத்து போட்ட உறவினருக்கு சிக்கல்

ஜாமினில் வந்த குற்றவாளிகள் தலைமறைவுகையெழுத்து போட்ட உறவினருக்கு சிக்கல்திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் ஜாமினில் வெளிவந்து தலைமறைவான குற்றவாளிகளுக்கு, ஜாமின் கையெழுத்து போட்டு உதவியவர்கள் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.தமிழகத்தில் படுகொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் பணியில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார் கடந்த சில நாட்களாக ரவுடிகள் விவரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, பட்டியலை தயார் செய்துள்ளனர். இரு கொலைகளுக்கு மேல், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தாதாக்கள் போல செயல்படும் ரவுடிகள் 'ஏ பிளஸ்' பிரிவிலும், அவர்களுக்கு கீழே உள்ள ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் 'ஏ' பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் 'பி' மற்றும் 'சி' பிரிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, திருப்பூர் மாநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில், 2 பேர், 'ஏ' பிரிவில், 8 பேர் என, பத்து பேர் முக்கியமான ரவுடிகள், 'பி' பிரிவில், ஒன்பது பேர் மற்றும் 'சி' பிரிவில், 206 பேர் என மொத்தம், 225 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புறநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில் ஒருவர், 'ஏ' பிரிவில், நான்கு பேர், 'சி' பிரிவில், 340 பேர் என மொத்தம், 345 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் என, மாவட்டம் முழுவதும், 570 ரவுடிகளை கண்காணித்து, அவர்களின் செயல்பாடுகளை போலீசார் உற்று நோக்கி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை, 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கமிஷனர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.விசாரணை வளையத்தில்...கொலை, கொள்ளை போன்ற பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்பவர்கள், ஜாமினில் வெளியே வருகின்றனர். கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளவர்களுக்கு பிடிவாரன்ட் வழங்கப்பட்டு அவர்களை போலீசார் தேடி கைது செய்கின்றனர். பிடிவாரன்ட் வழங்கியும், தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்க, ஜாமின் கிடைக்க உதவிய நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் உள்ள வழக்குகளின் விபரங்களை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கும் வகையில், மாநகரம் மற்றும் புறநகரில் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ