உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலையில் தைப்பூச திருவிழா நிறைவு மலைக்கு எழுந்தருளிய சுப்ரமணிய சுவாமி

சிவன்மலையில் தைப்பூச திருவிழா நிறைவு மலைக்கு எழுந்தருளிய சுப்ரமணிய சுவாமி

சிவன்மலையில் தைப்பூச திருவிழா நிறைவு மலைக்கு எழுந்தருளிய சுப்ரமணிய சுவாமிகாங்கேயம்:தைப்பூச திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மலைக்கு சிவன்மலை சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார்.காங்கேயம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச திருவிழா, கடந்த ஜன.,2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தொடங்கியது. கோவில் தேரோட்டம் கடந்த, 11ம் தேதி துவங்கி, ௧௩ம் தேதி நிறைவடைந்தது. 16ம் தேதி பரிவேட்டை தெப்ப உற்சவம், 17ம் தேதி மகா தரிசனமும் நடந்தது. தைப்பூச நிறைவு நாளான நேற்று மாலை, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.இதையடுத்து மாலை, 6:00 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, தம்பதி சமேத சுப்ரமணிய சுவாமி, பல்லக்கில் மலை கோவிலுக்கு புறப்பட்டார். பக்தர்கள் வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்தனர். அடிவாரத்தில், 1,000 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோவிலை சுவாமி அடைந்ததை தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ