உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில்விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில்விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில்விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்ஈரோடு:ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில், நேற்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி மாதம் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த, 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 3ல் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதுமுதல் தினமும் அம்மனுக்கு பால் அபி ேஷகத்துடன் அலங்கார தீபாராதனையும், அக்னி கபாலம் நகர் வலம் வருதலும் நடந்து வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழாவுக்காக, நேற்று முன்தினம் குண்டம் பற்ற வைக்கப்பட்டது. பொதுமக்கள் சார்பில் விறகு, பூஜை பொருட்களை காணிக்கையாக வழங்கினர். நேற்று அதிகாலை குண்டம் திருவிழா நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து காப்பு கட்டி, விரதம் இருந்து வந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோவில் தலைமை பூசாரி உட்பட பூசாரிகள் குண்டம் இறங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை வரை குண்டம் இறங்கி, வழிபட்டனர். இதனை தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி