உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணை அருகே தண்ணீர் எடுக்க எதிர்ப்புகோபி தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக போராட்டம்

அணை அருகே தண்ணீர் எடுக்க எதிர்ப்புகோபி தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக போராட்டம்

அணை அருகே தண்ணீர் எடுக்க எதிர்ப்புகோபி தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக போராட்டம்கோபி,:கோபி தாலுகா குண்டேரிப்பள்ளம் அணை அருகே, தனியார் விவசாய தோட்டத்தில் போர்வெல் அமைத்து, ௬ கி.மீ., துாரத்தில் உள்ள ஆறு விவசாயிகளின் நிலத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம், குழி தோண்டி, குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.முன்னதாக பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கொங்கர்பாளையம் கிராம மக்கள், கடந்த, ௨௯ம் தேதியே கோபி தாலுகா அலுவலகத்தில், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற கோரியும், நீதிமன்ற விதிகளை மீறி அமைக்கப்பட்டு வரும் குழாய் பதிக்கும் பணியை ரத்து செய்யக்கோரியும், கலெக்டருக்கு நேற்று போஸ்ட் கார்டுகள் எழுதி அனுப்பினர். ௧,௦௦௦ போஸ்ட் கார்டு எழுதி அனுப்பியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மூன்றாவது நாளாக தொடர்ந்த போராட்டத்தால், கோபி தாலுகா அலுவலகம் நேற்றும் பரபரப்பாக காணப்பட்டது. அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் விவசாய நிலத்தில் இருந்து, ௬ கி.மீ., தொலைவுக்கு குடிநீர் குழாய் கொண்டு செல்லும் பணி நேற்று முன்தினம் காலை தொடங்கி, நள்ளிரவு வரை தொடர்ந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய், பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நடந்தது. வினோபா நகர் எஸ்.டி.காலனி வழியாக பைப் லைன் அமைக்கும் பணிக்காக, பெருமாள் கோவில் காடு அருகில் குழி தோண்டினர். அப்பகுதிவாசிகள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கோபி தாசில்தார் சரவணன், நில வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், வி.ஏ.ஓ., ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர், 'அரசுக்கு சொந்தமான இடத்தில் தான் குழாய் அமைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர். அப்போது வாக்குவாதம் முற்றியதால், கேள்வி எழுப்பியவர்களை போலீசார் அப்புறப்படுத்தி பணியை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை