உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராயபாளையத்தில் தெருநாய்கள் ராஜ்ஜியம் மாநகராட்சி நடவடிக்கையோ பூஜ்ஜியம்

ராயபாளையத்தில் தெருநாய்கள் ராஜ்ஜியம் மாநகராட்சி நடவடிக்கையோ பூஜ்ஜியம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தபாடில்லை.மாநகராட்சி முதலாவது வார்டு ராயபாளையத்தில், அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்சில் வரும் மாணவர், ராயபாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். ஆனால், ராயபாளையத்தில் எந்நேரமும், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வலம் வருகின்றன. சாலையில் ஜோடி போட்டு திரியும் நிலையில், திடீரென டூவீலரில் செல்வோரையும், பாதசாரிகளையும் துரத்துகின்றன. நாயிடம் இருந்து முயற்சிக்கும் இருதரப்பினரும், சிறிது கவனம் பிசகினாலும் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியை கடக்க மிகவும் அச்சமாக இருப்பதாக, மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்பதும், அவர்களின் வருத்தமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ