இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிநாளை துணை ராணுவம் வருகை
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிநாளை துணை ராணுவம் வருகைஈரோடு, :ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, துணை ராணுவ படை வீரர்கள், 240 பேர் நாளை வரவுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் நெய்வேலியில் இருந்து தலா, 80 பேர் என, 240 துணை ராணுவ படை வீரர்கள் வருகின்றனர். கருங்கல்பாளையம் சோதனை சாவடி மற்றும் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பி.பெ.அக்ரஹாரம், கனிராவுத்தர் குளம், மூலப்பட்டறை, திருநகர் காலனி, கொல்லம்பாளையம் உள்ளிட்ட, 12 இடங்களில் உள்ள வாகன சோதனை மையங்களில் துப்பாக்கி ஏந்தியவாறு வாகன தணிக்கையில் ஈடுபடுவர். ஏற்கனவே பட்டாலியன் போலீசார், 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மேலும், 160 துணை ராணுவ படை வீரர்கள் விரைவில் வருவர். அவர்கள் ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு போலீசார் கூறினர்.