மேலும் செய்திகள்
சாலை விபத்தில் இருவர் படுகாயம்
18-Jan-2025
சாலை விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம் பெருந்துறை: சேலம், நெய்காரபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் மணிபாரதி, 23. இவர், விஜயமங்கலம் டோல் கேட் அருகிலுள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், தன்னுடன் வேலை செய்யும், சேலம் மாவட்டம், காட்டூர் பச்சமுத்து மகன் கவுதம், 20, ஹரிஷ் ஆகியோருடன் விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவில் சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக டிவிஎஸ் ஸ்கூட்டியில் வந்தவர், மூவர் மீது மோதி கீழே விழுந்தார். இதில் ஸ்கூட்டியில் வந்தவர், மணிபாரதி, கவுதம் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஹரிஷ் காயமின்றி தப்பினார். காயமடைந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ஸ்கூட்டியில் வந்த அந்தியூரை சேர்ந்த கதிரேசன், 29, என்பவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Jan-2025