ஈரோடு வ.உ.சி., பூங்காவில் வவ்வால்களால் வைரஸ் பீதி
ஈரோடு,:சீனாவில் ஹெச்.கே.யு.5 என்ற வைரஸ், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள மரங்களில் நுாற்றுக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இவற்றால் வைரஸ் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: வவ்வால்கள் மூலம் வைரஸ் பரவும் என்ற எச்சரிக்கையால் பீதி நிலவுகிறது. இந்நிலையில் நுாற்றுகணக்கான வவ்வால்கள் ஒரே இடத்தில் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் பூங்காவுக்கு, மைதானத்துக்கு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வர தயக்கமாக உள்ளது. இவ்வாறு கூறினர்.