மேலும் செய்திகள்
தி.மு.க., ஆர்ப்பாட்டம்
24-Feb-2025
தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கூட்டம்வெள்ளகோவில்:காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவிலில், மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுத்துறை அமைச்சருமான சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். வெள்ளகோவில் நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.இதில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தலைமை கழக பேச்சாளர்கள் இந்திரகுமார் தேரடி உள்ளிட்டோர், தேசிய கல்விக்கொள்கை, இந்தி திணிப்பு, தமிழகத்துக்கு கல்வி நிதி தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ் மக்கள் உரிமையை தர மறுக்கும் மத்திய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்தும் பேசினர். வெள்ளகோவில், காங்கேயம், சென்னிமலை, குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். * வெள்ளகோவில் நகர அ.தி.மு.க., துணை செயலாளரும், வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலருமான வைகை மணி, நகராட்சி கவுன்சிலர் சிட்டி பிரபு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், முதல்வர் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். நேற்று முன்தினம் வெள்ளகோவிலில் இணைப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், வெள்ளகோவில் நகரத்தை சேர்ந்த, 500 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
24-Feb-2025