காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு
காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் சூர்யபிரகாஷ். உள்ளாட்சி தேர்தலின்போது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டு, நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். இதையடுத்து, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தலைமைக்கு விளக்க கடிதம் அளித்ததின் அடிப்படையில், சஸ்பெண்ட் நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். இதையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான சாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நகர செயலர் சேமலையப்பன், வெள்ளகோவில் நகர செயலர் முருகானந்தன் கலந்து கொண்டனர்.