மேலும் செய்திகள்
டவுன் பஸ்களில் தானியங்கி கதவு பயணிகள் நிம்மதி
11-Mar-2025
அரசு டவுன் பஸ்களில் கதவு பொருத்தம் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளிகோபி:கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 37 டவுன் பஸ்களும், 46 புறநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன. கடந்த, 2021ல் துவங்கிய தமிழக அரசின், மகளிர் இலவச பயண திட்டத்தால், அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகரித்து, படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், படிக்கட்டுகளில் அபாய பயணம் மேற்கொள்வதால் டிரைவர், கண்டக்டருக்கு தலைவலி அதிகரித்தது. படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, கோபி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், டவுன் பஸ்களில் இரு வழியிலும், கதவு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடக்கிறது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'அரசு டவுன் பஸ்களில், 90 சதவீதம் கதவு பொருத்தப்பட்டுள்ளது' என்றார்.
11-Mar-2025