உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் தேர்வீதியில் நள்ளிரவில் படையெடுக்கும்கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு

அந்தியூர் தேர்வீதியில் நள்ளிரவில் படையெடுக்கும்கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு

அந்தியூர் தேர்வீதியில் நள்ளிரவில் படையெடுக்கும்கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்புஅந்தியூர்:கர்நாடகாவிலிருந்து இரவு நேரத்தில், திம்பம்-சத்தி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இருந்து சத்தி, கோபி, கோவை செல்லும் கனரக வாகனங்கள் பர்கூர்மலை வழியாக வருகின்றன. இவை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா வழியில் செல்லாமல், குறுகிய சாலையான தேர்வீதியில் பயணிக்கின்றன. குறிப்பாக நள்ளிரவு, ௨:௦௦ மணி முதல் அதிகாலை, ௪:௦௦ மணிவரை, டாரஸ் லாரிகளே அதிகம் செல்கின்றன.இதனால் தேர்வீதி, சிங்கார வீதியின் பல இடங்களில், சாலைகளில் குழி உருவாகியுள்ளது. தேர்வீதி பாலதண்டாயுதபாணி கோவில் அருகில் கூத்தம்பூண்டி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வீணானது. ஒருவழியாக செய்தி கிடைத்த பேரூராட்சி ஊழியர்கள் நேற்று வந்தனர். குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுத்தனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: அந்தியூர் பிரதான சாலையான பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா வழியில் செல்லாமல், தேர்வீதி, சிங்கார வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு, போக்குவரத்து போலீசார் தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே குடிநீர் குழாய் உடைவதை தடுக்க முடியும். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து பேரூராட்சி பணியாளர்கள் கூறும்போது, அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால், கூத்தம்பூண்டி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்தது. அதை சரி செய்துள்ளோம். கனரக வாகனங்கள் இவ்வழியே சென்றால், குழாய் அடிக்கடி உடைவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி