உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் பெருந்துறை:பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, நேற்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று இ-மெயிலில், மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மதியம், 12:00 மணிக்கு பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தொந்தரவு இல்லாமலும், வழக்கமான மருத்துவ பணிகளுக்கு இடையூறு இல்லாமலும், வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு நடத்திய சோதனையில், அது வெறும் புரளி என தெரிய வந்தது.************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை