அடுக்குமாடி குடியிருப்புகளுக்குஅடிப்படை வசதி-அமைச்சர் உறுதி
அடுக்குமாடி குடியிருப்புகளுக்குஅடிப்படை வசதி-அமைச்சர் உறுதிஈரோடு:-ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை பதிவு செய்து கொண்ட அமைச்சர், தேர்தல் முடிந்த பின், நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:கருங்கல்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்துடன், இப்பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்புடன் போதிய மின் விளக்குகள், பொது கழிப்பிடம் ஏற்படுத்தி தரப்படும். இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு, கூடுதல் கட்டடம் ஏற்படுத்தி தரப்படும். விசைத்தறியாளர் வேண்டுகோளின்படி இலவச மின்சாரத்துக்கான யூனிட் உயர்த்தப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை, இலவச பள்ளி சீருடை அவர்களது வேண்டுகோளின்படி விசைத்தறிகளில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விசைத்தறியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.அமைச்சருடன் ஈரோடு எம்.பி., பிரகாஷ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், நிர்வாகிகள் செந்தில்குமார், திருவாசகம், சிவகுமார், ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.