உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் கண்ணெதிரே யானைதாக்கியதில் பெண் படுகாயம்

மக்கள் கண்ணெதிரே யானைதாக்கியதில் பெண் படுகாயம்

மக்கள் கண்ணெதிரே யானைதாக்கியதில் பெண் படுகாயம்பவானிசாகர்:பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியை ஒட்டியுள்ள பூதிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாரம்மாள், 60; நேற்று மதியம் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு தெங்குமரஹடா செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார். பூதிக்குப்பம் நிறுத்தத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி கிராம மக்களுடன் நடந்து சென்றார்.அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை துரத்தியது. அச்சமடைந்து ஆளுக்கொரு பக்கம் ஓட்டம் பிடித்தனர். ஆனால் மாரம்மாளை துரத்தி தும்பிக்கையால் தாக்கியதில் இடது கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. உடன் வந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொதுமக்கள் கண்ணெதிரே, மூதாட்டியை யானை தாக்கியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை