உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்டி.என்.பாளையம்,:டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இதையொட்டி பவானி ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் நேற்று புனித நீர் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மாலையில் கருவலுார் மாரியம்மன் கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பெண்கள் அரிசி கூடை மற்றும் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். இரவில் முப்பெரும் தேவிக்கு முதல் கால பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால பூஜை, விமான கோபுரம் கலசங்கள் பிரதிஷ்டை, பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வு நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.மணமான இளம்பெண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ