உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சக்திதேவி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா

சக்திதேவி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா

சக்திதேவி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழாஈரோடு: ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை நடத்திய சக்தி சிறப்பு பள்ளி, மறுவாழ்வு மைய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித் தொகை வழங்கும் விழா, ஈரோட்டில் நடந்தது.முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி வரவேற்றார்.மனநல மருத்துவர், மனதின் மையம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மனநலம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன், சக்தி சிறப்பு பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய மாணவர்கள் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி பேசினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வழிகாட்டி திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடர் ஒத்துழைப்பு நல்கி வரும் வழிகாட்டி திட்ட, 41 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை கவுரவித்தும், விருட்சம் திட்டம் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கியும் பேசினார். விழா ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, செந்தில்குமார். தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !