உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள்விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருள்விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருள்விற்றவர் மீது வழக்குஈரோடு:மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி சாமிநாதபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 64. நேற்று முன்தினம் மதியம், சாமிநாதபுரத்தில் உள்ள தனது மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து ஹான்ஸ் பாக்கெட், ஆறு கூல் லீப் பாக்கெட், ஸ்வாகத் 10 பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தார். மொடக்குறிச்சி போலீசார், மளிகை கடையில் ரெய்டு நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை