உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருத்துவ துறை பணியாளர்கள் சங்கம்தொடர் போராட்டங்கள் அறிவிப்பு

மருத்துவ துறை பணியாளர்கள் சங்கம்தொடர் போராட்டங்கள் அறிவிப்பு

மருத்துவ துறை பணியாளர்கள் சங்கம்தொடர் போராட்டங்கள் அறிவிப்புஈரோடு:ஈரோடு மாவட்ட மருத்துவ துறை பணியாளர்கள் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் அதன் தலைவர் சின்னசாமி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர், கிரிஸ்டல் இண்டகரேட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் போன்றோருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 'ஹவுஸ் கீப்பிங்', பாதுகாவல் பணிகளில், 400 பேர் ஈடுபடுகின்றனர். இப்பணிகள் அவுட் சோர்சிங் முறையில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்கின்றனர். இவர்கள் கிரிஸ்டல், குவாலிட்டி பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. நிர்ணயித்த எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிப்பதில்லை.நோயாளிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில்லை. அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம், 26,000 ரூபாய் வழங்க வேண்டும்.பி.எப்., - இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்க வேண்டும். அடையாள அட்டை, பணி நேர அட்டை வழங்க வேண்டும். 3 செட் சீருடை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச், 3 முதல், 5 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது, 10 முதல், 14 வரை ஆர்ப்பாட்டம், 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி