உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைதுஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர், செங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க., கிளை அவை தலைவர். இவரின் மகன் சுரேந்தர், 24; கோவையில் ஒரு தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையை சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சுரேந்தரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை